Advertisement

அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா 2019

அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் முதல் கோடை விழா டப்ளினிற்கு அருகிலுள்ள கவுண்டி கில்டேரில் உள்ள செல்பிரிட்ஜ் GAA கிளப் - ல், சிறப்பாக நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் இந்த விழாவில் அயர்லாந்தின் பல பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன கலந்து கொண்டனர்.

வெயிலிலே விளையாடி, தமிழிலே உரையாட என்ற கருப்பொருளைத் தாங்கிநடைபெற்ற இவ்விழாவில் தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, உறியடித்தல், நொண்டி, தண்ணீர் நிரப்புதல், சாக்கு ஓட்டம், பலூன் உடைத்தல், ஓட்டப் போட்டி மற்றும் கால் கட்டு ஓட்டம் போன்றவற்றில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழ்ப் பாரம்பரிய உணவுகளுக்கான உணவு அரங்குகளும், கிராமத்துப் பெட்டிக்கடை போன்றே விற்பனை செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளும் பங்கேற்றோரை பெரிதும் கவர்ந்தன.


மாலையில் கலை நிகழ்வுகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் கல்வி திட்டமான 'தமிழ்த்தாய் கல்வித்திட்டத்தில்' மழலைக் கல்வியை நிறைவு செய்த நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற தமிழ் உயிர்மெய் எழுத்துக்களைப் பற்றிய பாடலும், ஆத்திச் சூடிப் பாடலும் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தது.


தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனத்தைத் தொடர்ந்து, மண்வாசம் கலைக்குழுவினரின் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பறையாட்டம் நிகழ்வுகள் பங்கேற்பாளர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இவ்விழாவினை அயர்லாந்திற்கான இந்தியத் தூதர் திருமிகு. சந்தீப் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி மழலைக் கல்வியை முடித்த குழந்தைகளுக்கும், தன்னார்வ ஆசிரியர்களுக்கும், அயர்லாந்து தமிழ்ச் சங்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.


மாலை 7.30 மணி அளவில் இவ்விழா இனிதே நிறைவுற்றது.


இத்தகைய விழாக்களை ஆண்டுதோறும் நடத்தி அயர்லாந்து முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கான ஒருங்கிணைப்பு விழாவாகவும், தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டுக்களையும் மற்றும் பண்பாட்டுக் கலைகளை வளர்க்கும் விழாவாகவும் நடத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.




- நமது செய்தியாளர் ரமேஷ் குருநாதன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ

    நல்ல வேளை நம்ம அரசியல் தலைங்க யாரையும் அழைக்கவில்லை

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement