Advertisement

சிங்கப்பூரில் உ.வே.சா. நினைவுச் சொற்பொழிவு

சிங்கப்பூர் தென்னிந்திய அந்தணர் சங்கம் ஆண்டுதோறும் தமிழ்த்தாத்தா மகோமகோபாத்யாய உ.வே.சா நினைவுச் சொற்பொழிவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இவ்வாண்டு அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய அரங்கில் மிக விமரிசையாக நடத்தியது. சிங்கப்பூர்த் தமிழறிஞர் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் “ கண்ணதாசன் – மனிதன் முதல் மகான் வரை “ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

“ மனிதர்கள் பிறக்கும் போதே மகானாகப் பிறப்பதில்லை. அவர்கள் பெற்ற வாழ்க்கை அனுபவங்களும் உண்மை நோக்கிய பயணங்களும் தேடல்களும்தான் அவர்களை மகான்களாக உயர்த்துகின்றன. சாதாரண கண்ணதாசனாகப் பிறந்த அவரை காதல் – காமம் – விருப்பு வெறுப்பு – கோபம் – பகை போன்ற குணங்கள் ஆட்டிப் படைத்தன. தோல்விகளும் துயரங்களும் புடம் போட்டுப் பக்குவமாக்கின. அவையே அவருக்கு ஞானப் பூக்கள் மலர்ந்த மோனப் பாதையாக மாற்றியது. யாருக்கும் அஞ்சாத ஸ்திதப்பிரக்ஞனாக வாழத் தொடங்கிய அவர் மறையும் போது மகானாக உயர்ந்தார். அவரது ஞான யாத்திரையின் விளக்கமே ஏழு தொகுதிகளாகத் தனிப்பாடல்களாக அமைந்துள்ளன “ என்று கூறிய சரோஜினி அவர்தம் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்.

ஸ்ருதி – சுவாதிக்குமார் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. அமைப்பின் தலைவர் இல.கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் அ.கி.வரதராசன் பேச்சாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். டாக்டர் இ.சுவாமிநாதன் நன்றி நவில நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement