Advertisement

அஜ்மான் தமிழ் மருத்துவ நிலையத்தில் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் புதிய மருத்துவ திட்டம் அறிமுகம்

அஜ்மான் : அஜ்மான் அல் ஹிரா தமிழ் மருத்துவ நிலையத்தில் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் புதிய மருத்துவ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அஜ்மானில் அல் ஹிரா மருத்துவ நிலையம் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் இல்யாஸ் காசிம் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது.


இந்த மருத்துவ நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு வர்த்தக பிரமுகர் முஹம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தார்.

அப்போது தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் மும்தாஜ் எனப்படும் சிறப்பு காப்பீட்டு திட்டமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


அப்போது பேசிய அப்துல் ரஹ்மான், இந்த திட்டம் குறைந்த வருமானம் கொண்ட அனைவருக்கும் மிகவும் பயனளிக்க கூடியது.


இந்த மருத்துவ நிலையம் இன்னும் சிறப்பான வகையில் உயர தான் பிரார்த்திப்பதாக கூறினார்.

அமீரக திமுக தலைவர் திருச்சி அன்வர் அலி, ஈமான் கல்சுரல் செண்டரின் பொதுச்செயலாளர் ஹமிதுயாசின், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், அமீரக காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஹமிதுர் ரஹ்மான், பேரவையின் நிர்வாகிகள் மதுக்கூர் ஹிதாயத்துல்லா, அப்துர் ரசாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிலால் அலியார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பசுபதி கோவில் ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement