Advertisement

வாட்ஸ்அப்பில் கோரிக்கை - ஒரே நாளில் தீர்வு; குவைத் போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை

குவைத் ஸால்மியா தீயணைப்பு நிலையத்தின் வலதுபுறம் (நான்காவது சுற்று வட்ட சாலை துவங்கும் பகுதி) ஷாரா அம்மான் பிரதான சாலை நடைபாதையில் முள் செடிகள் அதிகமாக வளர்ந்திருப்பதால் அதில் நடப்பதற்கு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நடைபாதையை விட்டு கீழே இறங்கி நடந்தால் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பிரதான சாலை எப்போதும் போக்குவரத்து அதிகமிருக்கும் பகுதி என்றும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முள் செடிகள் இருக்கும் பகுதியின் வரைபடமும், மேலதிக படங்களும் இணைத்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ குவைத் போக்குவரத்துத் துறைக்கு வாட்ஸ்அப் மூலம் (15.05.2019 புதன்) மாலை 2:45 மணிக்கு கோரிக்கையை அனுப்பி வைத்தார்.

மாலை 4:06 மணிக்கு குவைத் போக்குவரத்துத் துறை புகாரை பெற்றுக் கொண்டதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் அனுப்பியது.

(16.05.2019 வியாழன்) காலை 8:00 மணி முதல் முட்செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே, குவைத் போக்குவரத்துத் துறையின் பொது மேலாளர், நம்முடைய கோரிக்கையின் அடிப்படையில் குவைத் விவசாயத் துறையுடன் இணைந்து முட்செடிகள் அகற்றப்பட்டதை புகைப்படங்களுடன் தகவல் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்தப் பகுதி, மக்கள் எவ்வித சிரமமின்றி நடப்பதற்கு வசதியாக உள்ளது (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).

ஒரே நாளில் அதுவும் நோன்பு காலத்தில் நடவடிக்கை எடுத்த குவைத் போக்குவரத்துத் துறைக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கமும், பொதுமக்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

- நமது செய்தியாளர் கலீல் பாகவீ

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement