Advertisement

அல் அய்ன் இந்திய சமூக நல மைய தலைவராக தமிழர் தேர்வு

அல் அய்ன் : அல் அயன் நகரில் இந்திய சமூக நல மையம் இருந்து வருகிறது. இந்த மையத்தில் அதிகமாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடந்த நிர்வாகக் குழு தேர்தலில் தமிழகத்தின் கீழக்கரை நகரை சேர்ந்த முபாரக் முஸ்தபா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மையத்தின் தலைவராக தமிழர் ஒருவர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் துணைத்தலைவராக கே.வி. ஈசா, பொதுச்செயலாளராக ஐ.ஆர். முகைதீன், பொருளாளராக இ.சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தலைவராக தேர்வு செய்யப்பட்ட முபாரக் முஸ்தபாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement