Advertisement

உங்கள் கனவை நனவாக்க வருகிறது- 'ட்ரீம்கிட்ஸ் ஆப்'

'கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல,உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (லட்சிய) கனவு'-அப்துல் கலாம்.

இது அனைவருக்கும் தெரிந்த மேற்கோள் தான். ஆனால் அயல்நாடுகளில் புலம்பெயர்ந்த நம் இந்தியமக்கள் சிலரின் தூங்கவிடாமல் செய்த ஒரு கனவு, ஒரு நல்ல முயற்சியாகி இங்கும் சரி இந்தியாவில் வசிக்கும் குழந்தைகளுக்கும்,பெற்றோருக்கும் சரி நனவாகப் போகிறது.

‘ட்ரீம்கிட்ஸ் ஆப்’ இதன் நோக்கமே, உலகமெல்லாம் பரவியிருக்கின்ற கோடிக்கணக்கான நம் மக்களின் ஆசையை நிறைவேற்றத்தான். நம் மொழியும், கலாச்சாரமும், பண்பாடும், இசையும், கல்வியும், கணிதமும், யோகாவும் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே நம் குழந்தைகள் பயில சௌகரியமான ஆப் தான் 'ட்ரீம்கிட்ஸ்'.

வெளிநாடுகளில் நாம் பிள்ளைகளுக்குக் கொடுக்க விரும்பும் கல்வி,இலக்கியம் எல்லா ஊர்களிலும் கிடைப்பதில்லை. சில ஊர்களில் இருந்தும், வகுப்புகள் தொலைதூரத்தில் இருக்கலாம் அல்லது நம் பட்ஜெட்க்கு மீறியதாக இருக்கலாம். இப்படி எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து, அமெரிக்கத் தமிழர்களால் (Nகீஐ ) தங்கள் சொந்த செலவில் தயாராகிவருகிறது 'ட்ரீம்கிட்ஸ் ஆப் '

இந்த ஆப், சிலவற்றை இலவசமாகவும் வழங்குகிறது. சில பயிற்சிவகுப்புகளுக்கு குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும். மிகமுக்கியமாக, வெளிநாடுகளில் வசிப்போருக்குத் தெரியும், மருத்துவர்களை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது. அப்படிப்பட்ட நிலையில் எளிதில் டாக்டர்களைத் தொடர்புகொள்ள, சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள இந்த ஆப்பில் வழிமுறைகள் உள்ளன.

மேலும் உள்ள நல்ல பல வாய்ப்புகளை பாருங்கள்: குழந்தைகள் வளர்ப்புமுறைகள்- பேரன்ட்ஸ் சர்க்கிள்- பெற்றோருக்கான செய்திகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள் என நிறைய பயனுள்ள விஷயங்களைக் கொண்டது தான் இந்த ஆப்.

குழந்தைகளுக்கான கதைகள் சம்பந்தப்பட்ட ஆடியோ- வீடியோக்களை கீதாஞ்சலி நிறுவனம் வழங்குகிறது. கலைகளில் சிறந்து விளங்கும், நாம் நினைத்தே பார்க்கமுடியாத கலைஞர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள மிகுந்த வாய்ப்புகளைப் பெறலாம்.

கர்நாடக சங்கீதம் பயில நித்யஸ்ரீ மஹாதேவன், தமிழ் பயில யாருக்கும் இணையில்லாக் கவிஞன் மகாகவி பாரதியாரின் பேரன் நிரஞ்சன் பாரதி, வேதிக் மேத்ஸ் பயில, கென் வில்லியம்ஸ் எனும் ஆக்ஸ்ஃபோர்ட்,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் வீடியோக்கள் மூலம் பயிற்சி அளித்து வரும் அறிஞர், தவிர கணிதம் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உதவ கமலா ராஜசேகர், கலாச்சாரமும்,ஆன்மீகமும் இணைத்துகொள்ள 'பாலபக்தி'க்கு ஹேமா பாஸ்கர், யோகா அறிய நிர்மலா குமார். இப்படி வல்லுநர்கள் உங்கள் இல்லம் தேடி அதுவும் குறைந்த செலவில் நிறைந்த ஞானம் வழங்கப்போகும் ஓர் சிறந்த ஆப் தான் இந்த 'ட்ரீம்கிட்ஸ்'

குழு வகுப்புகள் மற்றும் தனி வகுப்புகள் உண்டு. மேலும் தொடர்பு கொள்ளமுடியாத பகுதிகளில் வசிப்போர், இவர்களைத் தொடர்பு கொண்டால் உங்கள் குழந்தைகளும் அத்தனை நல்ல வாய்ப்புகளையும் பெறலாம். வெளிநாட்டில் இத்தனைக் குறைந்த கட்டணங்கள் பெற்று, கற்றுத் தரப்போகும் இந்த குழு, இவ்வருமானத்தைக் கொண்டு எதிர் காலத்தில் இந்தியாவில் வசதிகள் இல்லாத குழந்தைகளுக்கு உதவும் உயரிய நோக்கத்தின் ஆரம்பமே இந்த 'ட்ரீம்கிட்ஸ் ஆப் '. மேலும் பல விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள துண்டறிக்கையைக் காணவும்.

இதனை வரவேற்போம், குழந்தைகளின் வாழ்க்கையை வளம்பெறச் செய்வோம் !
www.dreamkidzsoftware.com

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement