Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீ அஷ்டலட்சுமி மஹா யாஹம்

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் கோயிலில் ஸ்ரீ அஷ்ட லட்சுமி மஹா யாகம் மே மாதம் 10 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகள் அன்னையர் தினத்தில் நிறைவு பெற்றது விசேஷமாகும். வைகறையில் சுப்ரபாதமும் 27 சுமங்கலி பூஜை – லோக மாதாவான ஸ்ரீ மகா லட்சுமித் தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனம் – 336 நாமாவளி கொண்ட திரிசதி அர்ச்சனை முதலிய வைபவங்கள் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன.
ஒரு புறம் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மறுபுறம் ஸ்ரீ மகாலட்சுமித் தாயார் திருவுருவங்கள் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் திரிசதி அர்ச்சனையாகச் செய்யப்பட்டு பக்த கோடிகளுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஆண்டுக்கு ஒரு முறை சமர்ப்பிக்கப்படும் திருப்பாவாடை சேவை – அன்ன தான அலங்காரம் மெய்சிலிர்க்க வைத்தது. ஸ்ரீ ராமர் சன்னதியில் இந்த அன்னதான அலங்கார ஆராதனை செய்யப்பட்டு அவை பக்தப் பெருமக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அஷ்ட லட்சுமிகளும் சர்வ அலங்காரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அருமை. தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.சீனிவாச பட்டாச்சார்யார் தலைமையில் நடைபெற்ற இந்த யாகத்தில் தாமரைப் பூ அர்ச்சனையும் விசேஷ இடம் பெற்றது. பெருந் திரளான பக்தகோடிகள் கலந்து கொண்டு ஸ்ரீ லோக மாதாவின் திருவருள் பெற்றுச் சென்றனர். ஆலய மேலாண்மைக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement