Advertisement

துபாயில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் தேவிபட்டினம் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த தேவிபட்டனம் பிரமுகரும், வர்த்தக பிரமுகருமான ஏசியன் கிளாஸ் ஹவுசின் உரிமையாளர் ஹமீது அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்கு தேவிபட்டினம் நலச்சங்க தலைவர் பலீல் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் தேவிபட்டினம் நிஜாம் தனது உரையில் துபாய், கல்பா, ருவைஸ் என அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்ட தேவிபட்டினம் நலச்சங்க அங்கத்தினர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் அங்கத்தினர்களின் ஒத்துழைப்புடன் தாயகத்தில் இன்னும் பல நலப்பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஈமான் கல்சுரல் செண்டரின் பொதுச்செயலாளர் ஹமிது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் இனிய திசைகள் மாத இதழ் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஷேக் தாவுது, முஹம்மது அஸ்லம், சமீர், அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement