Advertisement

ஏப்ரல் 14 ல் லண்டன் முருகன் கோயிலில் விசேஷ பூஜை

லண்டன்: லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சித்திரை முதல் நாளன்று ( ஏப்ரல் 14) அதிகாலை முதல் விசேஷ யாக பூஜை, ஹோமங்களுடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.மனித வாழ்க்கை பண்பட்டு பக்குவமடைந்து அறிவிலும் ஆன்மிகத்திலும் வளர்ந்து மனிதப் பிறவிக்குரிய குணநலன்கள் வாய்க்கப் பெற்று இல்லற வாழ்க்கையில் எல்லாப் பேறுகளையும் அடைந்து பேரின்பம் பெற்று வாழ இறையருள் மிக முக்கியமானது. அறிவினாலும் திறமை சார்ந்த பதவியினாலும் உலகின் அனைத்து பாகங்களிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனுதினமும் வழிபட வேண்டி ஆலயங்கள் அமைத்து அதனை பரிபாலித்து உற்சவங்கள் நடத்தி இறையருள் பெறுகின்றனர்.மேலை நாடுகளில் முதன்மையான இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரின் கிழக்கே ஈஸ்ட்ஹாம் என்னும் இடத்தில் ஆலயத்திற்கே உரிய கலையழகோடு கம்பீரமான ராஜ கோபுரத்துடன் விளங்குவது லண்டன் ஶ்ரீ முருகன் கோயிலாகும்.1970 களில் இந்நாட்டில் வாழ்ந்து வந்த ஆசிய கண்ட இந்து மக்களின் ஆன்மிக உந்துதலால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஶ்ரீ ஆனந்த விநாயகர் முதலிய பரிவார தெய்வங்களோடு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேதரராய் ஶ்ரீ முருகப் பெருமான் அருளாட்சி புரிந்து வருகிறார்.1975 ஆம் ஆண்டு மாத வழிபாடாக தொடங்கி, 1984ல் முதல் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மேலை நாட்டில் முதன் முதலாக தேர்த்திருவிழா நடத்தப்பெற்று, 2005 ஆம் ஆண்டு கற்கோயிலாக வடிக்கப்பட்டு மிக விமர்சையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நித்ய பூஜைகளும் மகோற்சவம், ஆடிக்கிருத்திகை, தேர்த்திருவிழா மற்றும் இந்து சமய வழிபாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடபெற்று வரும் லண்டன் ஶ்ரீ முருகன் ஆலயத்தில் சென்ற 2017 ஆம் ஆண்டு மூன்றாவது மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு விசேஷ பூஜை




தமிழ் ஆண்டு தொடங்குகிற சித்திரை முதல் நாளாம் தமிழ் வருஷப் பிறப்பன்று அதிகாலை முதல் விசேஷ யாக பூஜை, ஹோமங்களுடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிறக்கின்ற ஆண்டு எல்லா மக்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை தருகின்ற ஆண்டாகவும் உலகில் அமைதியும் சமாதானமும் தன, தான்ய வளர்ச்சியும், மக்கள் மனதிலே மகிழ்ச்சியும் நிலவ வேண்டியும் பக்தர்கள் அனைவரும் விசேஷ வழிபாடுகள் செய்து மகிழ்வார்கள்.மாலையில் வழக்கமான வழிபாடுகளோடு புதிதாக பிறக்கும் ' விகாரி' என்கின்ற புது வருட பலாபலன்களை முருகன் சன்னதியில் அர்ச்சகர் வாசித்து அனைவருக்கும் நல்ல பலன்கள் நடைபெற வேண்டி பிரார்த்தித்து பிரசாதங்கல் வழங்குவதோடு தமிழ்ப் புத்தாண்டு வழிபாடுகள் நிறைவு பெறும்.பிறக்கின்ற விகாரி ஆண்டில் அனைத்து மக்களும் இன்பமாக வாழ வேண்டியும் கல்வி வளர்ந்து தொழில் பெருகி, வர்த்தகம் விரிந்து, மனித நேயம் சிறந்து, உலகம் உய்ய வேண்டியும் எல்லாம் வல்ல லண்டன் ஶ்ரீ முருகப் பெருமானை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்.
- ஆலய அறங்காவலர்கள், நிர்வாக குழுவினர்







Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement