Advertisement

திரைகடல் ஓடி திரவியம் தேடும் திவ்யா

கிட்டத்தட்ட திவ்யா ஒரு குழந்தை நட்சத்திரம் தான் ! ஆறு வயதிலிருந்தே பாரம்பரிய சங்கீதம் கற்க ஆரம்பித்து, இன்றுவரை கற்றுக்கொண்டே இருக்கிறார் கனடா- மாண்ட்ரீல் நகரத்தில் வசிக்கும் மும்பை பெண்.

இடைவிடாத பயிற்சிகள், கிடைக்கும் வாய்ப்புகளை விடாத புத்திசாலி, கற்றதை தொடர்ந்து பிறருக்கு சொல்லித்தர ஆன்லைன் வகுப்புகள் என நல்ல உழைப்பாளி ! தானும் ஆன்லைனில் சங்கீதம் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார். கனடாவில் நடக்கும் இசைவிழாக்கள், கோவில் விழாக்கள், சங்கீத கச்சேரிகள் என எங்கும் இவர் சங்கீதத்தைக் கேட்கலாம். இந்தியாவில் இருந்து,பாடகர்கள் இங்கு வந்து நடத்தும் இசைநிகழ்ச்சிகளில் நிச்சயம் பங்குகொள்கிறார்.

இந்தியன் ஐடில்,சூப்பர் சிங்கர்,ஐடியா ஸ்டார் சிங்கர் போன்ற நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு, தன்னை நன்கு மெருகேற்றிக் கொண்டுள்ளார். இதில் பெரும்பாலும் வெற்றிகள் என்றே சொல்லலாம். தவிர,ஜிங்கிள்ஸ், நடனம், நாடகங்களுக்கு பின்னணிப் பாடகராகவும், ஐந்து மொழிகளில் பேசவும் பாடவும் செய்கிறார். மேலும் பலமொழிகளில் முயன்றும் பாடிவருகிறார்.

இவர் சிறப்பாகக் கருதுவது,கடந்த வருடம் கனடாவில் உள்ள 'இந்திய உயர் ஆணையர் 'இல்லத்தில் சிறப்பு விருந்தினராகச் சென்று பாடியது மறக்கமுடியாத ஒன்று என்கிறார். 2018 ல் கனடா- ஆட்டோவா வில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் பங்குகொண்டு பாடியுள்ளார்.

திவ்யாவின் முதல் சொந்தப் பாடல், பிப்ரவரி 15 அன்று வெளியிட்டுள்ளார்.( ரிதம் அண்ட் ப்ளூஸ்). தலைப்பு- 'தேடுவேன்'. சமூகவலை தளங்கள் அனைத்திலும் கேட்கலாம். ஐடுயூன்,அமேசான்,சோனி,கானா,விங்க் போன்ற மியூசிக் ஆப் களில் உள்ளது. இந்த முதல் பாடல் நிறைய பாராட்டுகளையும், பெருமையையும் தேடித் தந்துள்ளது இவருக்கு.

தொடர்ந்து வெற்றிகளை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் திவ்யாவிற்கு மேலும் பல வாய்ப்புகளும்,வெற்றிகளும் அமைய வாழ்த்துக்கள் !
https://youtu.be/n2Afr3oMLjE

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement