Advertisement

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா பிரச்சாரம்

ஆண்டுதோறும் சிங்கப்பூர் அரசு ஆதரவுடன் , தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்போடு வளர் தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ் மொழி விழா மார்ச் 21 ஆம் தேதியே இவ்வாண்டு நடைபெற உள்ளது. நிகழ்வுகள் அதிகம் - பங்கு பெறும் அமைப்புகள் அதிகம் - நிகழ்ச்சிகளோ அருமை...அருமை. எதைப் பார்ப்பது? எங்கே செல்லுவது என்ற தமிழ் ஆர்வலர்களின் “ குமுறல் “ . இவைகளை நிவர்த்தி செய்ய இவ்வாண்டு ஒரு வாரம் முன்கூட்டியே விழா துவங்குகிறது . வர்த்தக , தொழில் துறை அமைச்சர் எஸ் . ஈஸ்வரன் தொடக்கி வைக்கிறார்.இதன் பிரச்சாரம் லிட்டில் இந்தியாவில் “ சுவரொட்டி “வழி கோலாகலமாக நடைபெற்றது.

-நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement