Advertisement

அயர்லாந்தில் பெண்கள் தினம்

டப்ளின்: அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெருமளவில் அயர்லாந்து வாழ் தமிழ்ப் பெண்கள் பங்கேற்றனர்.


இந்த விழாவிற்கு அயர்லாந்து தமிழ் மங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு திறமை கொண்ட 8 பேர் மேடை ஏறி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.



கடந்த 6 ஆண்டுகளாக நமது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர முத்தமிழ்ச் சங்கம் நடத்தி வரும்மீனா, நடனத் திறமை கொண்ட ரதி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



விழாவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட நொறுக்கு தீனி, தமிழ்நாட்டு மல்லிகை பூ ஆகியவை விற்கப்பட்டன. பாரம்பரிய முறைப்படி மருதாணி இடப்பட்டது.



- நமது செய்தியாளர் ரமேஷ் குருநாதன்


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement