Advertisement

ஆக்லாந்தில் பந்துலா ராமா கச்சேரி

நியூசிலாந்து கர்நாடிக் மியூசிக் சொசைட்டி சென்ற சனிக்கிழமை ஆக்லாந்தில் உள்ள பிளாக் ஹவுஸ் பே கம்யூனிட்டி ஹாலில் ஸ்ரீமதி பந்துலா ராமா அவர்களின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள் அவருடன் வித்வான் மூர்த்தி அவர்கள் வயலினும் மற்றும் வித்வான் ஸ்ரீ சாய் கிரிதர் மிருதங்கம் வாசித்தார். கச்சேரி மாலை ஐந்தரை மணிக்கு தொடங்கியது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சாந்தி சுவாமிநாதன் கலைஞர்களை வரவேற்று பேசினார்

சரஸுட சாவேரி ராக வர்ணத்துடன் நிகழ்ச்சி காலை கட்ட தொடங்கியது. அதை தொடர்ந்து வந்த தீக்ஷிதரின் வல்லப நாயக என்ற என்ற கீர்த்தனையை பேகடா ராகத்தில் மிகச் சிறப்பாக பாடினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீ ரஞ்சனி ராகத்தில் சிவனின் காணவேண்டாமோ என்ற கீர்த்தனை பாடினார்.

பிறகு தியாகராஜர் க்ருதி பிரதாபவராளி ராகத்தில் மிக அழகாகப் பாடினார். அதைத் தொடர்ந்துரசிகர் விருப்பமாக லலிதா ராகத்தில் 'நண்ணு ப்ரோவ லலிதா ' என்ற ஸ்யாமா சாஸ்திரி கீர்த்தனையை குழைந்து பாடி அந்த ராகத்தை மிக மென்மையாக ப்பாடி ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு பிறகு கல்கடா ராகத்தில் பார்வதி நின்னு நேர நம்மிது' என்ற ஸ்யாமா சாஸ்திரியின் இன்னொரு கீர்த்தனை யை பாடி அன்று ஹேமவதி ராகத்தை முதன்மை ராகமாக எடுத்துக்கொண்டு விஸ்தீரணமாக ஆலாபனை செய்து 'ஸ்ரீ காந்திமதிம்' என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனையை கல்பனா ஸ்வரங்களுடன் கீர்த்தனையை மிகச் சிறப்பாக பாடினார்

அன்று ராகம் தானம் பாலவியில் பிலஹரி ராகத்தில் மிக அழகாக ஆலாபனை செய்து தானத்தை ராக மாலிகையாக தொடுத்து ஸ்ரீ மூர்த்தி அவர்கள் இயற்றிய 'ஹரி ஸ்ரீஹரி பிலஹரி நரசிம்ம' என்ற பாலவியை மிக நன்றாக பாடி பிறகு பல்லவி ஹரி ஸ்ரீ ஹரி பிலகரி நரசிம்மா என்ற பல்லவியை மிக அழகாக பாடினார்.

பிறகு ரசிகர்களின் விருப்பமான ஹம்சானந்தி ராகத்தில் சீனிவாச திருவேங்கடமுடையான் என்ற அழகான கீர்த்தனையை மிகச் சிறப்பாக பாடி ரசிகர்களின் கைதட்டலை பெற்றார். அதை தொடர்ந்து முத்துகாரி யசோதா என்ற குறிஞ்சி ராக அன்னமாச்சார்யா பாடலைப் பாடி பிறகுகானடா ராகத்தில் அமைந்த தில்லானாவை பாடி கச்சேரியை இனிதாக மங்களம் பாடி முடித்தார்கள். கச்சேரியின் நிறைவில் ரசிகர்கள் எழுந்து நின்று தங்களின் மகிழ்ச்சியை நீண்ட நேரம் கரவொலிகளாக எழுப்பினர். ஸ்ரீ மூர்த்தி அவர்கள் அழுத்தமான வயலின் வாசிப்பில் கச்சேரிக்கு மேலும் வலுவூட்டினார். அவரின் வயலின் வாசிப்பு கச்சேரிக்கு நல்ல பக்கபலமாய் அமைந்தது. மிருதங்கம் ஸ்ரீ சாய் கிரிதர் அவர்களின் வாசிப்பு தனியாவர்த்தனத்தில் அலைகடலாய் ஆர்ப்பரித்து ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீமதி மாலை நடராஜ் கலைஞர்களுக்கு வாழ்த்துரையும் மிகச்சிறப்பான முறையில் நன்றியுரையும் கூறி முடித்தார்கள்

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement