Advertisement

மொம்பாசாவில் 4 பண்டிகைகளின் கொண்டாட்டம்

கென்யா: கென்யாவில் உள்ள மொம்பாசாவில் ‘’மொம்பாசா தமிழ் சங்கம்’’ சார்பில் மிலாடி நபி, கிறிஸ்துமஸ், ஆங்கில புது வருடம் 2019, மற்றும் பொங்கல் கொண்டாட்டம் என நான்கு விழாக்களும் மிக விமர்சையாக ஹிந்து யூனியன் கடற்கரையில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இனிய காலை பொழுதில் தமிழ் தாய் வாழ்த்துடன் சங்க தலைவர் திரு. சுந்தரேசன் குமரகுரு அனைவரையும் வரவேற்று தனது பண்டிகை வாழ்த்துரைகளை வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு மொம்பாசா தமிழ் நண்பர்கள், குழுவின் உறுப்பினர்கள் என அனைத்து மதத்தினரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். சங்க மகளிர் அனைவரும் புதுப் பானையில் பொங்கலிட்டு, கிறிஸ்துமஸ் கேக் மற்றும் மிலாடி நபி இனிப்புகளை வழங்கி அனைவருக்கும் விருந்தளித்தனர். தமிழ் மக்கள் அனைவரும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக கவனித்து கொண்டனர். இந்த விழாவின் முடிவில் நமது தென்னிந்திய உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

- தினமலர் வாசகி தீபா குமரகுரு

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement