Advertisement

பொங்கல் விழா கொண்டாட்டம்

ஆக்லாந்து தமிழ் அஸோஸியேஷன் இந்த முறை பொங்கல் விழாவினை இதுவரை நடந்திராத அளவிற்கு மிக சிறப்பான முறையில் ஏற்பட்டு செய்திருந்தார்கள். ATA தலைவர் திரு வை ரவீந்திரன் மற்றும் துணைத்தலைவர் திரு வேல்முருகனும் இணைந்து சமையல் போட்டி, கோல போட்டி, குழந்தைகளுக்கான தமிழ் அறிவு திறனை சோதிக்கும் போட்டி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறியவர் மற்றும் பெரியவருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் பெப்ரவரி 2ஆம் தேதியன்று Mt.Roskill War Memorial Hall இல் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட்டது.சமையல் போட்டியில் ஆரோக்கியத்தை முன்னிட்டு கேழ்வரகு,, சிறுதானியம், குதிரை வால் அரிசி மற்றும் கருப்பட்டி கொண்டு பாரம்பரிய முறையில் தயாரித்திருந்தார்கள். அதில் முறையே 15க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மிகவும் ஆர்வமாக செய்தார்கள். அவர்கள் முறையே கேழ்வரகு கூழ், கொள்ளு ரசம், சிறுதானிய வடை, கருப்பட்டி கடலை மிட்டாய், மைசூர்பாக்கு போன்றவைகள் செய்து போட்டியில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

அது போல கோலப்போட்டிற்கும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானை கோலம், ஜல்லிக்கட்டு, கரும்பு,, புள்ளி மற்றும் பூகோலமிட்டு மிகச்சிறப்பாக கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வண்ணங்களை உபயோகித்து கோலமிட்டனர்.

இதனிடையில் குழந்தைகள் தங்கள் தமிழ் அறிவை வெளிப்படுத்தி திருக்குறள் பாடல்கள் மற்றும் கதைகள் சொல்லியும் வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளை ஏழு நடுவர்கள் கொண்டு வெற்றியாளர்களை தேர்ந்துடுத்தனர். அவர்கள் சந்திரா சங்கரன், ஜோதி ரெட்டி, மாலினி பலராமன், மல்லிகா ராமன், நிர்மலா மூர்த்தி, உஷா ஷியாம் மற்றும் சசி இந்திரன் நடுவர்களாக இருந்து தேர்ந்து எடுத்தனர்.

பிப்ரவரி 9 ஞாற்றுக்கிழமையன்று Mt.Eden War Memorial Hall இல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பாரம்பரிய காலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கரகாட்டம், பாலங்குழி, பம்பரம் ஆடுதல், கில்லி. உறி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டிகல் நடைபெற்றன. நியூசிலாந்து பாராளுமன்ற அங்கத்தினரான மைக்கேல் வுட் கலந்து கொண்டு பரிசுகள் கொடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கும் கொண்டு விழாவினை சிறப்பித்தார். அவருக்கு ஆக்லாந்து தமிழ் அசோசியேஷன் தமிழ் செல்வன் பட்டத்தையும் போன விழாவில் கொடுத்து சிறப்பித்தனர். ATA தலைவர் திரு ரவீந்திரன் மற்றும் துணை தலைவர் வேல்முருகன் அவர்களும் விழாவிற்கு வந்தவர்களுக்கு நன்றி கூறினர்.

விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவும் பரிசும் கொடுக்கப்பட்டன.

-நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; line-height: 16.0px; font: 14.2px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000; background-color: #ffffff} span.s1 {font-kerning: none} p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; line-height: 16.0px; font: 14.2px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000; background-color: #ffffff} span.s1 {font-kerning: none} p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; line-height: 16.0px; font: 14.2px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000; background-color: #ffffff} span.s1 {font-kerning: none} p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; line-height: 16.0px; font: 14.2px Helvetica; color: #000000; -webkit-text-stroke: #000000; background-color: #ffffff} span.s1 {font-kerning: none}

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement