- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
ரெக்கை கட்டிப் பறக்குதப்பா சான் ஆண்டோனியோ சைக்கிள்
தமிழ்நாடு சென்னை மாநகராட்சி , சென்னை ரோட்டரி கிளப் மற்றும் சான் ஆண்டோனியோ 'அனுஜா SA ' கௌசி ஆகியோர்களின் முயற்சியாலும் 2018 ஜூலை 2 வது வாரத்தில் சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகளில் படிக்கும் எட்டு மாணவ,மாணவிகள் அமெரிக்கா வந்தனர்.டெக்சாஸ் ஹூஸ்டனிலும்,சான் ஆண்டோனியோவிலும் தங்கி, மிகமுக்கியமான இடங்களுக்குக் கல்விச் சுற்றுப்பயணமாக சென்றனர். அவர்களுடன் மூன்று பொறுப்பாளர்களும் வந்திருந்தனர்.
அச்சமயத்தில் நம் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும்,நண்பர்களும் அவர்களைச் சந்தித்து, உரையாடி, சிறப்பு விருந்தளித்து, பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர். அப்போது அவர்களுடன் கலந்துரையாடிய போது, அமெரிக்காவிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்டதாக பல நல்ல விஷயங்களைக் கூறினர்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!