Advertisement

நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பொங்கல் விழா

நியூசெர்சி மாநிலம், மேற்கு விண்ட்சர் நகரில் செயல்படும் வள்ளலார் தமிழ்ப் பள்ளியின், நான்காம் ஆண்டு பொங்கல் விழா, மொழிச் சார்ந்த போட்டிகளைக் கொண்டதாக கடந்த சனிக்கிழமை, பிப்ரவரி 2ம் தேதி, நடைபெற்றது. குறள் தேனீப் போட்டி, செய்யுள் போட்டி, ஆத்திச்சூடிப் போட்டி, எழுத்துத் தேனீப் போட்டி, பேச்சுப் போட்டி, மழலைப் பாடல்கள் போட்டி, மாறுவேடப் போட்டி என ஏழு போட்டிகளும், பொங்கல் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தது.

பொங்கல் விழா காலை 11மணிக்கு தொடங்கியது. பொங்கல் விழாவினை பள்ளி ஆசிரியர் திருமதி.தீபா தொகுத்து வழங்கினார். பள்ளி ஆசிரியர் திருமதி.பிரேமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து மழலை நிலை மாணவர்களின் மாறுவேடப் போட்டி நடந்து. ஒளவையார், பாரதியார் எனப் பல்வேறு வேடங்களில் மழலை நிலை மாணவர்கள் மேடையில் தோன்றி, பார்வையாளர்களைக் கவர்ந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திருமதி.பொற்செல்வி வேந்தன் வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பொங்கல் போட்டிகள் குறித்துப் பேசினார்.

தொடர்ந்து மழலைப் பாடல்கள் போட்டி, குறள் தேனீப் போட்டி, செய்யுள் போட்டி, ஆத்திச்சூடிப் போட்டி, எழுத்துத் தேனீப் போட்டி, பேச்சுப் போட்டி எனப் பல போட்டிகள் நடைபெற்றன. மழலை நிலை மாணவர்கள் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆத்திச்சூடிகளைக் கூறி அனைவரையும் கவர்ந்தனர். அது போலவே குறள் தேனீப் போட்டியில் அடிப்படை நிலை 2 மாணவர்கள் சுமார் 35திருக்குறள்களைக் கூறியது பொங்கல் போட்டிகளின் சிறப்பம்சமாக இருந்தது.

பொங்கல் போட்டிகளுக்குப் பிறகு உழவுத் தொழிலையும், நாட்டுப் புறப்பாடல்களையும் மையமாகக் கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்று பொங்கல் திருவிழாவின் கொண்டாட்டத்தை விழாவிற்குக் கொண்டு வந்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சசிகுமார் ரெங்கநாதன் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து போட்டிகளில் பெற்றிப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பங்கேற்புப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இறுதியாக வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பறையிசைக்குழுவின் பறையிசைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்களின் கும்மி நடனத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

- தினமலர் வாசகி தமிழ்ச் செல்வி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement