Advertisement

பிரான்சில் தைப்பூசம் மற்றும் வள்ளலார் வழிபாடு

பிரான்ஸ் சிவன் கோயிலில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது . கோயிலில் எல்லா மூர்த்திகளுக்கும் அபிஷேகமும், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பூசத்தை ஒட்டி வள்ளலார் நமக்கு அருளிய 'திருவருட்பா' பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டு, அவர் இவ்வுலகுக்கு முதன்முதலாக உருவாக்கிய ஜோதி வழி பாடு நடைபெற்றது,

அவரின் கோட்பாடுகளில்முக்கியமானதாக கருதப்படும் பசி என்று வருபவர்களுக்கும் அடியார்களுக்கும் புசி என்றுஉணவுவழங்குவதே.தொடர்ந்துஅனைத்துமூர்த்திகளுக்கும் திபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதத்துடன் அன்னதானம் அளிக்கப்பட்டது. முருகப்பெருமான் மற்றும் வள்ளலாரின் அருளாசியை பெற்ற ஆனந்தத்தில் விழா நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement