Advertisement

டப்ளினில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி

டப்ளின் கேந்திர ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் கிளை நிறுவனமான வேதாந்தா சொசைட்டி வளாகத்திலுள்ள நிவேதிதா இல்லத்தில் ஜனவரி 27 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி கோலாகலமாக நடைபெற்றது. மரபார்ந்த வழிபாடு – பக்தர்களின் பக்திபூர்வ தெய்விக பஜனை – அயர்லாந்து சநாதன இல்லப் பிள்ளைகளின் பாராயணம் – பக்திப் பாடல்கள் – கவிதை வாசிப்பு – சுவாமி பூர்ணானந்தாஜி மகராஜ் சிறப்புரை எனப் பல்சுவை அங்கங்கள் நிறைந்த பக்திப் பரவச விழாவாக நடைபெற்ற இவ்விழாவில் சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆற்றல் – புரட்சிக் கோட்பாடு – இசையிலும் இசைக் கருவிகளான தப்ளா – வயலின் – தம்பூரா போன்றவற்றில் சுவாமிஜி பெற்றிருந்த வித்துவத்துவம் – துருபதம் – கயல் முதலியவைகளை மக்களிடம் கொண்டு சென்ற மகத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்ட போது கூடியிருந்த பக்தப் பெருமக்கள் மெய்சிலிர்த்தனர்.

டப்ளின் பிரபல சங்கீத – நாத யோகா விற்பன்னர் ஆஷிஷ் தா ஐரிஷ் இசைக் கருவி மூலம் துருபதம் மற்றும் கயல் வாசித்ததோடு தோடி ராக இசையாஞ்சலி சமர்ப்பித்தார். இசையாஞ்சலியை செவியுற்ற பக்தர்களின் கரவொலி நீண்ட நேரம் ஒலித்தது. மற்றும் கித்தார் மூலமாக ஆங்கிலப் பாடலைக் கலந்து கொண்ட குழந்தைகள் குதூகலிக்கும் வண்ணம் இசைத்து மகிழ்வித்தார்.

முத்தாய்ப்பு நிகழ்வாக பிரம்மாண்ட கேக் சமர்ப்பிக்கப்பட்டு “ ஜன்ம தின “ப் பாடல் சேர்ந்திசையாகப் பாடப்பட்டு வெட்டப்பட்டது. சுவாமி விமோக்க்ஷானந்தாஜி மகராஜ் தீபாராதனை காட்ட கலந்து கொண்ட பக்தர்கள் “ சுவாமி விவேகானந்தா மகராஜிக்கு ஜே “ என மனமுருகி முழக்கமிட்டனர். நிறைவாக அருட் பிரசாதமும் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது.

- தினமலர் வாசகர் உத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement