Advertisement

மலேசியாவில் பொங்கல் கொண்டாட்டம்

பினாங் : மலேசியாவின் பினாங்கு நகரில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமையில் பொங்கல் திருவிழா பிப்ரவரி 02 ம் தேதி மிக விமரிசையாக நடைப்பெற்றது. பினாங்கு மாநில துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான பேராசிரியர் டாக்டர்.பி.ராமசாமி தலைமையிலும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை செயல்முறை இயக்குனர் டத்தோ எம்.ராமச்சந்திரன் வழிக்காட்டலிலும் இந்நிகழ்வு சிறப்பாக நடப்பெற்றது. தமிழர்களின் கலை கலாச்சாரம் சார்ந்த விளையாட்டுகளான சிலம்பாட்டம்,கபடி, உறி அடித்தல்,பூ தொடுத்தல்,கூந்தல் பின்னுதல், சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி,உடல் உறுப்பு தானத்தில் அனுமதித்துக்கொள்ளுதல் ,மாட்டு வண்டி சவாரி,அம்மிக்கல், இயந்தரக்கல் பயன்படுத்தும் முறை, ஆட்டுக்கல்லில் அரைத்தல்,கோலப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்தேறியது. பினாங்கு இந்து அறப்பணி வாரிய கட்டிடம் எதிராக உள்ள வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்ட இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தினமலர் வாசகர் தாமோதரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement