Advertisement

டல்லாஸ் நகரில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் திருவிழாக் கொண்டாட்டம்

வட அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள DFW தமிழ் நண்பர்கள் குழு DFW ஹிந்து கோவிலுடன் ஒன்றிணைந்து தமிழர் தைத்திருநாள் பொங்கல் திருவிழாவை ஜனவரி மாதம் 12 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை DFW ஹிந்து கோவிலில் மிக விமர்சையாக கொண்டாடினார்கள். இப்பொங்கல் விழாவை சிறப்பாக நம் பாரம்பரிய முறைபப்டி கொண்டாடி மகிழ சுமார் 4000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

வட அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தலைமை இல்லாமல் DFWநண்பர்களால் (TNONT) முழுவதும் இலவசமாக 4000 தமிழ் மக்களுக்கு தமிழ் பாரம்பரிய காய்கறிகளால் சமைத்து வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது . இப்பொங்கல் விழா முழுக்க முழுக்க நண்பர்கள் ஒன்றுசேர்ந்து தன்னார்வலர்கள் துணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழா நம் தமிழ் பாரம்பரிய முறைப்படி மண்பானை ,கரும்பு , மாடு, ஏர் கலப்பை ,வாழை இலை, பதினாறு வகையான அறுசுவை விருந்து என் மிக வித்தியாசமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஓவியம் மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை மையமாகக் கொண்டு சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள் ஓவியம் மற்றும் கோலங்கள் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர். பெண்கள் வாசலில் வண்ணக் கோலமிட்டு, கரும்பில் குடில் கட்டி, மண் பானையில் பொங்கல் வைத்து, ஏர் கலப்பை , மாடு என கொண்டாடினர் . விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஒன்றுசேர்ந்து மாட்டுப் பொங்கல் கொண்டாடி , மாட்டுக்கு மாலை அணிவித்து பொங்கல் ஊட்டி அனைவரும் மகிழ்ந்தனர்.

பின்னர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி மற்றும் உரி அடித்தல் போட்டிகள் நடைப்பெற்றது. விழாவில் நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பதினாறு வகையான அறுசுவை விருந்து சமைத்து வாழை இலையில் வந்திருந்த அனைவருக்கும் உணவு பரிமாறியது இவ்விழாவின் சிறப்பு அம்சமாகும். விழாவில் சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் நிறைவாக உள்ளூர் இசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்று விழா இனிதே முடிவடைந்தது.

இப்பொங்கல் விழா இவ்வளவு சிறப்பாகவும் பாரம்பரிய முறைப்படியும் கொண்டாட முக்கிய காரணம் அமெரிக்காவில் உள்ள அடுத்த தலைமுறையினரான நம் குழந்தைகளுக்கு பொங்கல் விழாவின் சிறப்பும், இவ்விழா எவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் கொண்டாடுகிறார்கள் என்பதை பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே என்று DFW நண்பர்கள் குழுவினர் கூறி மகிழ்ந்தனர்.

- தினமலர் வாசகி சசிகலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement