Advertisement

சியாட்டெல் தமிழ் கழக பொங்கல் விழா

சியாட்டெல், வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் போத்தல் நகரில் சியாட்டெல் தமிழ் கழகத்தினரால் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தமிழ் குடும்பத்தினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக அனைவருக்கும் தலைவாழை இலை விருந்து உபசரிப்பு நடைபெற்றது. விருந்தில் தமிழ் குடும்பத்தினர்களால் கொண்டுவரப்பட்ட பொங்கல் மற்றும் சிறப்பு உணவுகளும், சியாட்டெல் தமிழ் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளும் பரிமாறப்பட்டன.

சிறுவர்களும் மாணவ, மாணவியரும் பாரம்பரிய உடையுடன் விழாவில் கலந்துகொண்டனர். விழாவானது அனைத்து தமிழ் குடும்பத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சியாகவும் வளரும் தலைமுறைக்கு தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்டு சேர்க்கும் விதமாகவும் அமைந்திருந்தது.

- தினமலர் வாசகர் மலர்விழி நாகராஜன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement