Advertisement

தர்-எஸ்-ஸலாமில் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி

தர்-எஸ்-ஸலாம்: கிழக்கு ஆப்ரிக்க நாடான தன்ஸானியா, தர்-எஸ்-ஸலாம் நகரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கோப்பையையும் பரிசு தொகையையும் வென்றது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் பாகிஸ்தானிய அணிகள் போட்டி இட்டன. இதில் கேப்டன் ஶ்ரீதர், துணை கேப்டன் பிரபு குமார் தலைமையிலான தமிழக அணி வெற்றி பெற்றது.
கால் இறுதியில் கோவா அணியை வென்ற தமிழக அணி, அரை இறுதியில் பாகிஸ்தானை எதிர் கொண்டது. முதலில் ஆடிய தமிழக அணி, 12 ஓவரில் 84 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 63 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய கர்னாடகம், 15 ஓவரில் 74 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழக அணி, 10,3 ஓவரில் 76 ரன் எடுத்து கோப்பையை வென்றது.
ஆட்ட நாயகனாக சதீஷ் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து போட்டிகளிலும் அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய தமிழக வீரர் ஹரீஷ் மற்றும் அதிக ரன் குவித்த தமிழக வீரர் சதீஷ் க்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
- நமது செய்தியாளர் ஶ்ரீதர்


p.p1 {margin: 0.0px 0.0px 10.7px 0.0px; line-height: 16.0px; font: 14.7px 'Tamil Sangam MN'; color: #0c64c0; -webkit-text-stroke: #0c64c0} span.s1 {font-kerning: none} span.s2 {font: 14.7px Helvetica; font-kerning: none}

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement