Advertisement

பாரிஸ் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

பிரான்சில் புத்தாண்டு 2019ஐ ஒட்டி பிரான்ஸ் அருள்மிகு மீனாக்ஷி சுந்தேரேசுவரர் ஆலயம் மற்றும் பாரீஸ் நகரை சுற்றி உள்ள கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 5ம் தேதி அமாவாசையும் மூல நட்சத்திரம் கூடிய நாளில் ஸ்ரீ அனுமந்த ஜெயந்தியும் கொண்டாடப்பட்டது. கிரிங்ஞ்ஞி நகரத்தில் பஜனையுடன் கோலாகாலமாக வழிபாடு நடைபெற்றது. இதில் மிக ஆர்வமுடன் சிறுவர் சிறுமியர் தாள வந்தியங்களுடன் தமிழில் பக்திப்பாடல்களை தங்களது மழலை வார்த்தைகளால் சொல்லியபோது அமுதகானம் கேட்டது போல் இருந்தது என்றால் மிகையாகாது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இது போன்ற பஜனை பாடல்களை அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்பது கூடுதல் செய்தி.

- நமது செய்தியாளர் முத்துக்குமாரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement