Advertisement

இக்காலம் - இளைஞர்களின் கைகளில்

'துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!'

எல்லோரும் அறிந்த பாரதியின் பாப்பா பாடல்! நல்ல மனம் கொண்ட மனிதர்கள், தன் நலத்தை விட பொது நலத்தில் மிகுந்த அக்கறை காட்டுவர். நல்ல வேலை, கை நிறைந்த சம்பளம் என தன்னைப் பக்குவப்படுத்திய பின், சுயநலத்தோடு இல்லாது, நம் நாட்டை,நம் மக்களை நினைத்துப்பார்ப்பது இன்றைய இளைஞர்களின் மிக நல்ல குணமாக மாறிவருகிறது !

அப்படிப்பட்ட ஒரு இளைஞர் கூட்டம் தான்,சமூக அக்கறையுடன் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கு நேரடியாய்ச் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து, அதை தங்கள் 'யு டர்ன்' சானலில், 'பிளைன் டாக்' நிறுவனத்தின் தயாரிப்பில் ’ஒரு நா காத்து' என்ற பெயரில் ஒரு குறும்படமாக எடுத்து வந்துள்ளது.

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில்,உள்ள பிட்ஸ்பர்க்கில் வசிக்கும் கார்த்திகா 'பிளைன் டாக்' வெப் சைட்டின் நிறுவனர். தன் கல்லூரி நண்பர்கள் குறும்படம் எடுப்பதை அறிந்து, தானும் அதில் பங்கு கொள்ள விரும்பினார். இவருடன் சந்தோஷ் குமாரும் இணைந்து, நிதிஉதவி அளித்து உதவினர்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த,சென்னையில் பணியாற்றும் பொறியாளரான அயன் கார்த்திகேயன் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இச்செயல் இவர்களை உற்சாகப்படுத்தவே, இதனைத் தொடர்ந்து நம் நாட்டில் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யவேண்டிய மாற்று வழி, விவசாயிகளின் நல்வாழ்வுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் என பல நல்ல நோக்கத்துடன் மேலும் தொடர்ந்து செயல்பட உள்ளனர்.

இக்குறும்படத்தைக் காண விரும்புவோர், கீழுள்ள தளத்தில் சென்று காணலாம்.
https://youtu.be/83uoMj2gkfI
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement