Advertisement

லேகோஸ் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வருஷாபிஷேகம்

லேகோஸ், நைஜீரியா: கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் 2011ம் ஆண்டு ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் வருஷாபிஷேகம் செய்வதை கோவில் செயற்குழு செய்து வருகிறது. இதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 108 விசேஷ சங்குகள் வரவழைக்கப்பட்டு முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த வருடமும் டிசம்பர் 9ம் தேதி கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில் 7ம் ஆண்டு சங்காபிஷேகமும் வருஷாபிஷேகமும் விமர்சையாக நடைபெற்றது.

காலை 9 மணிக்கு துவங்கிய இந்த விழாவில் 108 சங்கில் பால் அபிஷேகம் செய்து வைத்தார் சிவகுமார் சிவாச்சாரியார். தயிர், தேன், சந்தனம், கதம்ப பொடி, பன்னீர், இளனீர், பஞ்சாமிர்தம் மற்றும் இதர வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முருகன் அருள் வேண்டி பிரார்த்தனையோடு விழா இனிதே நிறைவுற்றது.


- நமது செய்தியாளர்ஸ்ரீவித்யா ஆனந்தன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement