Advertisement

ஆஸ்திரேலியா கான்பெர்ரா பார்லிமெண்டில் தீபாவளி

கான்பெர்ரா: ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் டேவிட் கோலேமன், நிதிதுறை உதவி அமைச்சர் ஜெட் செசல்ஜா ஆகியோருடன் இணைந்து, தீபாவளி பண்டிகையை, ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் கொண்டாடியது. கான்பெர்ரா பார்லிமெண்ட் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆஸ்திரேலிய இந்தியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

மாலை 06:30 மணிக்கு விழா துவங்கியது. விழாவை சங்கீதா ராமன், சந்தோஷ் குப்தா நெறிப்படுத்தினர். ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் தலைவர் பிரகாஷ் மேத்தா வரவேற்றார்.


ஆஸ்திரேலிய பிரதமர் சார்பாக பங்கேற்ற குடியேற்றத் துறை அமைச்சர் டேவிட் கோலேமன், எதிர்கட்சித் தலைவர் பில் ஷார்டன், நிதிதுறை உதவி அமைச்சர் ஜெட் செசல்ஜா, இந்திய நண்பர்கள் பார்லிமெண்ட் குழு தலைவர் ஜூலியன் லீசர், இந்திய தூதர் ஏ.எம்.கோண்டானே ஆகியோர் தீபாவளி குறித்து பேசினர்.


பாரம்பரிய குச்சுப்பிடி நடனம். ராஜ்ஸ்தானி நடனம், கதக் நடனம், காபா நடனம், தாண்டி நடனம் நடைபெற்றன.


400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்ற விழா நிறைவில், சந்தோஷ் குப்தா நன்றி கூறினார்.


இந்திய பண்டிகையான தீபாவளி, இந்திய சமுதாயத்தினரை ஒன்றிணைக்கும் விழாவாக, கேளிக்கையும், உணவும், பொழுதுபோக்கு நிகழ்வாகவும் இருந்தது. தீபாவளி தற்போது உலகளாவிய பண்டிகையாக மாறி வருகிறது. ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.





- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement