Advertisement

இங்கிலாந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருத்தலம்

‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு


சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு


தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு


செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே’. – திருஞானசம்பந்தர்


திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களை தமிழ்நாட்டில் பல்வேறு சிவதலங்களில் நாம் கேட்பதுண்டு. அத்தேவாரத் திருப்பாடல்களை இங்கிலாந்திலும் கேட்பதற்கு வாய்ப்பு இருந்தது என்று கூறினால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? ஆம் அருள்மிகு மீனாட்சி சமேத அருள்பாலிக்கும் அருள்மிகு சுந்தரேஸ்வரரைத் தரிசிக்க இலண்டன் வாழ் இந்தியா மற்றும் இலண்டன் வாழ் ஸ்ரீலங்கா மக்;களும் ஒருங்கிணைந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருத்தலம் ஒன்றினை ‘ஹவிக்கம்’ என்ற இடத்தில் அமைத்துள்ளனர்.

தமிழில் ‘ஹவிக்கம்’ என்று அழைக்கப்படும் இந்த இடம் இலண்டனுக்கு வடமேற்கில் 47 கி.மீ. தூரத்திலும்,ஆக்ஸ்போர்டு என்ற நகரத்திற்கு தென்கிழக்கில் 43 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள நகரமாகும். பக்கிம்ஹாம் ஸியர் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய நகரம் இது என்று கூறப்படுகின்றது.


2012 ஆம் ஆண்டு அருள்மிகு தெய்வங்கள் வினாயகர்,மீனாட்;சி,முருகன் ஆகியோர் படங்களை மட்டும் வைத்து இங்குள்ள அமைப்பினர் பூஜைகள் நடத்தி உள்ளனர். இதன் பின் ஜீன் 2013 முதல் இப்போது இருக்கும் இடத்தினை குத்தகை அடிப்படையில் தக்க வைத்து,திருத்தலமாக்கி வழிபட்டு வருகின்றனர்.

இத்திருத்தலத்தில் மீனாட்சி அம்மன் சமேத அருள்பாலிக்கும் எம்பெருமான் சுந்தரேஸ்வரரையும், வினாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமதே வீற்றிருக்கும் முருகப் பெருமானையும் நாம் கண்டு வணங்கிச் செல்லலாம். இத்திருத்தலத்தில் நவகிரகங்களை வழிபடுவதற்குத் தனி சன்னதி உள்ளது.


இந்து கலாச்சாரம் மேன்மேலும் செழித்து ஓங்குவதற்கு SMAT (Sri Meenashi Amman Temple) என்ற அமைப்பு இத்தலத்தில் தனது நிர்வாகப் பொறுப்பினை மிகவும் திறம்பட நடத்தி வருகின்றனர். இந்த நிர்வாகம் எவ்வித இலாபம் நோக்கமின்றி பொது நலத்தினை மட்டும் முன்னிறுத்தி செயல்படுவது மட்டற்ற மகிழ்சியினைத் தருகின்றது. திருத்தலத்திற்கென்று தனியொரு இடம் பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதனை முன்னிட்டு ஆலய கட்டிட நிர்மாண நிதி சேகரிப்பு விழாவினை 22.10.2016 அன்று நடத்தியுள்ளனர். அவ்விழாவில் கர்நாடக சங்கீதம்,பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்சிகள் நடத்தியுள்ளனர். ஒரு சதுர மீட்டருக்கு ஆயிரம் பௌண்ட் என்ற கணக்கில் சுமார் 0.5 மில்லியன் பௌண்ட் நிதி திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் எடுத்துக் கூறும் போது,கடல்கடந்து வந்து நமது பாரம்பரியமும், இந்து கலாச்சாரமும் வளர எந்தளவுக்கு பாடுபடுகின்றனர் என்பது தௌ;ளத் தெளிவாகிறது அல்லவா?

ஆடி வெள்ளி, ஆடி பூரம்,சரஸ்வதி பூஜை,நவராத்திரி கொலு,தீபாவளி, பொங்கல், மகாசிவராத்திரி ஆகிய அனைத்து சிறப்பு பூஜைகளும் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருத்தலம் திறந்திருக்கும் நேரம் 18.30 முதல் 20.00 மணி வரை. பிரதி வெள்ளிக்கிழமை 18.00 முதல் 21.00 வரை நடை திறந்திருக்கும். திருத்தலம் தற்போது சிறிய அளவில் இருந்தாலும் அன்னதானம் வெகு சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இத்திருத்தலத்தின் தெய்வீக பணிகளை செய்து வருபவர் திரு மாணிக்க சதீஸ்வர குருக்கள் ஆவர். இவரது கையகப்பேசி எண் 078753 53802.; திருத்தலத்தின் எண் 077087 02606. வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இங்கு இடவசதிகள் உள்ளன.


- ச.பொன்ராஜ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement