ஷார்ட் நியூஸ்
1/10

- குழந்தைகள், வயதானவர்களை கவனிப்போருக்கு ரூ.15 லட்சம்
-
கொரோனா காரணமாக குழந்தைகளை வீட்டிலேயே கவனிக்கும் அரசு ஊழியருக்கு சலுகை
-
முதியோர்களை கவனித்து கொள்வோருக்கும், சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும்
-
அதன்படி அமெரிக்காவின் ஒரு மத்திய அரசு ஊழியர் 15 லட்ச ரூபாய் வரை பெறுவார்.
-
- தமிழகத்தை நெருங்கும் 'கொரோனா 2ம் அலை'
-
மஹாராஷ்டிரா, கேரளா, ம.பி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
-
5 மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தாராளமாக போக்குவரத்து நடந்து வருகிறது
-
முதல்வர் தனிக்கவனம் செலுத்தாவிட்டால் 2வது அலையிடம் சிக்க வாய்ப்புள்ளது
-
- திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம்
-
இந்நிலையில், தேனி பக்தர் தங்கத்திலான சங்கு, சக்கரத்தை காணிக்கையாக அளித்தார்
-
அவர் காணிக்கையாக அளித்துள்ள சங்கு, சக்கரத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்
-
- மதுரை: எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் பயங்கர தீ விபத்து
-
மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் நள்ளிரவு தீ விபத்து
-
12க்கும் மேற்பட்ட கடைகளில் தீ பற்றியதால், அப்பகுதி புகை மண்டலமாக மாறியது
-
தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன
-
- அதிக கட்டணம் ஏன்? ரயில்வே விளக்கம்!
-
குறுகிய தொலைவு பயணியர் ரயில்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்
-
வீண் ரயில் பயணத்தை தடுக்கவே, கட்டணம் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
-
தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டுமெனவும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது
-
- சிவில் சர்வீசஸ் தேர்வு மறுவாய்ப்பு மறுப்பு
-
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத மறுவாய்ப்பு அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது
-
கொரோனா வைரஸ் பரவல் இருந்ததால், தேர்வுக்கு சரியாக தயாராக முடியவில்லை
-
மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டுமென சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்
-
- ராகுல் பேச்சு கபில் சிபல் கடுப்பு
-
கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில வாக்காளர்கள் குறித்து ராகுல் பேச்சு
-
இதற்கு,வாக்காளர்களை அனைவரும் மதிக்க வேண்டும் என கபில் சிபல் பதிலடி
-
எந்த சூழ்நிலையில், அவர் அப்படி கூறினார் என, தெரியவில்லை எனவும் தெரிவித்தார்
-
- நிரவ் மோடி நாடு கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு
-
நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும்
-
ரூ14 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு தப்பியோடிய நிரவ், லண்டனில் கைது
-
ஜனவரியில் நடந்த விசாரணையில், பிப்.25ல் தீர்ப்பு வெளியாகுமென கூறப்பட்டது
-
- தி.மு.க., - காங்., தொகுதி பங்கீடு : இன்று பேச்சு
-
தி.மு.க., - காங்., இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு, இன்று துவங்குகிறது
-
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 20 இடம், ஒரு ராஜ்யசபா எம்பி தர விருப்பம்
-
40 தொகுதிகளுக்கு குறையாமல் பெற வேண்டுமென காங்., நிர்வாகிகள் வலியுறுத்தல்
-
- சாயப்பட்டறை கழிவுகள் - 28,000 விவசாயிகளுக்கு இழப்பீடு
-
சாயப்பட்டறை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்
-
28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு
-
இந்தியன் வங்கியில், 25 கோடி ரூபாய், ஆலை உரிமையாளர்கள் தரப்பில், டிபாசிட்
-