Load Image
Advertisement

11ம் தேதி பள்ளிகளை திறக்க தயாராகுங்கள்! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை

சென்னை: வரும், 11ம் தேதி பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:* மிக்ஜாம் புயல் பாதிப்பால் அறிவிக்கப்பட்ட விடுமுறைக்கு பின், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வரும், 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு உகந்த சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்* பள்ளி வளாகத்தை முழுமையாக துாய்மை செய்தல், சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்தல், பள்ளி வகுப்பறை மற்றும் அனைத்து கட்டடங்கள், சுற்றுச்சுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பணிகளை பார்க்க வேண்டும்* வளாகத்திலும், வகுப்பறைகளிலும், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசுவதுடன், கிருமி நாசினி தெளிக்க வேண்டும். விஷ பூச்சிகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்* மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், புத்தகம், சீருடை, நோட்டுகள் சேதமான, இழந்த மாணவர்களுக்கு, அவற்றை வழங்க மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே ஏற்பாடு செய்ய வேண்டும்.* பள்ளிக்கு மாணவர்கள் வரும் வழிகளை சுத்தம் செய்ய, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கலெக்டர் அலுவலகங்கள் வழியே, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.* முன்னாள் மாணவர்கள், என்.எஸ்.எஸ்., பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உதவிகளுடன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்* வரும், 11ம் தேதி அரையாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில், அதை எந்த புகாருக்கும் இடமின்றி நடத்த முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement