Load Image
Advertisement

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.,1ல் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 2023, தேர்வு முடிவுகள் டிச.,1ம் தேதி வெளியிடப்படுகிறது.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அவற்றை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு கடந்த அக்., 7ம் தேதி நடைப்பெற்றது. இதில் 1,27,673 மாணவர்கள் தேர்வு எழுதினர்.தேர்வெழுதியவர்களில் 1000 மாணவர்கள் (500 மாணவர், 500 மாணவியர்) தேர்ந்தெடுக்கப்பட்டு இளநிலைப் பட்டப்படிப்பு வரை மாதம் 1000 ரூபாய் என ஒரு கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும்.இத்தேர்வு முடிவுகள் டிச.,1ம் தேதி காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement