மாணவர்களுக்கு பூச்சிகள் சேகரித்தல் பயிற்சி
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நுண்ணுயிரியல், விலங்கியல் துறை சார்பில் பூச்சிகள் சேகரித்தல் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் விலங்கியல் மாணவிகள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாட்டில் பூச்சிகளின் பங்கு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் உள்ள பூச்சிகள், அதன் உறைவிடங்களின் வகைகள், பருவகால பூச்சிகள், இனப்பெருக்க எண்ணிக்கையை கணக்கிடுதல் பற்றி பயிற்சி வழங்கப்பட்டது. மாணவிகள் கைகளால் பிடித்தும், வலைகளை பயன்படுத்தியும் பூச்சிகளை பிடித்தனர். கல்லுாரி வளாகத்தில் 30 வகையான பூச்சிகளை கண்டறிந்தனர். அவற்றை எவ்வாறு பதப்படுத்தி சேகரிப்பது என மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசிலா, சரண்யா, துறைத்தலைவர் சியாமளாகவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!