துாய்மை பாரத திட்டம்: துாய்மையாகின பள்ளிகள்
உடுமலை: துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் திருமூர்த்திநகர் உயர்நிலை மற்றும் துவக்கப்பள்ளியில், துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மகத்துவ மைய மேலாளர் ரகோத்தமன் தலைமையில், அலுவலர்கள், பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகம், பூங்கா, சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதிகளை சுத்தப்படுத்தினர். தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா, பள்ளி தலைமையாசிரியர் விமலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!