Load Image
Advertisement

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு இணையான சான்றிதழ்

ஈரோடு: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள், மேற்படிப்பை தொடர 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல், www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளளது. அகில இந்திய தொழில் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறையின் மொழி தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்று, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய கல்வி சான்று இணைத்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ.,யில் நேரில் அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தினர், ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் வரும் அக்.,3க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement