Load Image
Advertisement

ஆசிரியர் பயிற்சி: தேர்வு முடிவுகள் 27ல் வெளியீடு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடைபெற்ற ஜூன்/ஜூலை 2023 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய முதலாமாண்டு/ இரண்டாமாண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் வரும் 27ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மேற்படி மாணவ, மாணவிகள் தங்களது விடைத் தாள்களை, மறுகூட்டல்-I செய்யவும், ஒளிநகல் (ஸ்கேன்) பெறவும் விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.,3 முதல் அக்.,5ம் தேதி வரை அன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள்களின் ஒளிநகல் வேண்டி விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டுமே மறுகூட்டல்- II மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும்.விடைத்தாள் ஒளிநகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275/- கட்டணமாகவும், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205/- கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement