பட்டினியால் அவதிதிருப்பத்துார் மாவட்டம், மாடப்பள்ளி, அண்ணா நகரைச் சேர்ந்த 45 வயது கூலி தொழிலாளி, அவரது 38 வயது மனைவிக்கு, 19, 14, 9, வயதில் மூன்று மகள்கள், 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இதில், 19 வயது மகளுக்கு திருமணமாகிவிட்டது. மற்ற இரு மகள்கள், திருப்பத்துார் அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு, மாடப்பள்ளி தொடக்கப்பள்ளியில், நான்காம் வகுப்பு படித்தனர்.தம்பதி இருவரும் மது போதைக்கு அடிமையானதால், மகள்களை சரிவர கவனிக்கவில்லை. அவர்கள் பட்டினியால் அவதிப்பட்டனர். சீருடை இல்லாமலும், பாட புத்தகங்கள் வாங்கி தராததாலும், பள்ளி செல்லாமல் நின்றனர். தகவலறிந்த, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று விசாரித்தார். அப்போது, கணவன், மனைவி இருவரும் போதையில் இருந்தது தெரியவந்தது.கலெக்டரிடம் மாணவியர் கூறியதாவது:போதை பெற்றோர்பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை. பள்ளி சீருடை இல்லை. எங்களுக்கு ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் இல்லை. அதனால் பள்ளி செல்லாமல் நானும், தங்கையும் வீட்டிலேயே முடங்கினோம்.இவ்வாறு கூறினர்.இதையடுத்து, கலெக்டர், 14 வயது மாணவியை மீட்டு, திருப்பத்துாரில் உள்ள மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கவும், 9 வயது மாணவியை அங்குள்ள தொடக்கப்பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார். போதை பெற்றோரை மீட்டு, குடிப்பழக்கத்தை மறக்க, மறுவாழ்வு மையத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார். கலெக்டரின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!