தமிழக மாணவர்களிடம் அவநம்பிக்கையை விதைக்க கூடாது: தமிழிசை
கோவை: நீட் தேர்வு மற்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக மாணவர்களிடம் அவநம்பிக்கையை விதைக்க கூடாது என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை பேசினார்.கோவை மாவட்டம், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில், ஒய் 20 கருத்தரங்கு நடந்தது.நிகழ்ச்சியை ஒட்டி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் பேசுகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பார்லிமென்ட்க்கு புதிய கட்டிடம், சந்திராயன் வெற்றி உள்ளிட்ட பல நிகழ்வுகளை குறிப்பிடலாம். தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் தொடர்ந்து உதாசீனப்படுத்தக் கூடாது. அது தவறு.உயிரோடு இருந்து உறுப்பு தானம் செய்பவர்களுக்கு, அரசு ஊக்கத்தொகை வழங்க முன்வர வேண்டும். தமிழக அரசு தங்களுடைய நட்பையும், உறவையும் பயன்படுத்தி கர்நாடக முதல்வருடன் பேசி, காவிரியில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!