மருத்துவக்கல்லுாரியில் பயிலரங்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரியின் மருந்தியல் துறை,தேசிய மருந்தாக்கியல்,கண்காணிப்பு துறை திட்ட மையத்துடன் இணைந்து தேசிய மருந்தாக்கியல் கண்காணிப்பு வாரமாக செப்.17 முதல் செப்.23 வரை அனுசரிக்கின்றனர்.இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியில் மருத்துவ மாணவர்களுக்கான தொடர் மருத்துவ பயிலரங்கம் நடந்தது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். டாக்டர் சலீம், துணை முதல்வர், டாக்டர் வீரமணி, மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு, மருந்தியல் துறை துறைத்தலைவர் டாக்டர் ஜெயபிரியா முன்னிலை வகித்தார்.மருந்தியல் துறை டாக்டர் உதவி பேராசிரியை முருக லட்சுமி, உதவி பேராசிரியர்கள் டாக்டர் இசக்கி ராஜா, டாக்டர் திவ்யா, மயக்கவியல் துறை இணை பேராசிரியை டாக்டர் கவிதா, திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்துகள் பாதுகாப்பு கண்காணிப்பு பிரிவின் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹசினா பர்வீன், சித்தா இளநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பாலமுருகன், பேராசிரியர் நெஞ்சக நோய் நிபுணர் டாக்டர் தெய்வநாயகம் பேசினர்.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் கவுரி திலகம், டாக்டர் முத்து கவிதா, டாக்டர் வைரவேல் பிரகாஷ், டாக்டர் ரதி தேவி செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!