சிறை கைதிகளுக்காக சிறப்பு எழுத்தறிவு திட்டம்
புழல்: மத்திய சிறை கைதிகளுக்கு, சிறப்பு எழுத்தறிவு திட்டம், நேற்று துவக்கப்பட்டது.சென்னை புழல் மத்திய சிறையில், கைதிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. அதில், சிறைத்துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி மற்றும் சிறைத்துறை, திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த திட்டத்தில், புழல் தண்டனை சிறையில், 147 கைதிகளும், விசாரணை சிறையில், 142 பேரும், மகளிர் சிறையில், 42 பேரும் படிக்கின்றனர். அவர்களுக்கு, பேனா, கையேடு, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், ஆறு மாத பயிற்சி முடிந்த பின், கல்வித்துறை சார்பில், அவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!