மாணவர்களுக்கு பேச்சு போட்டி பங்கேற்க கலெக்டர் அழைப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக, அண்ணாதுரை, ஈ.வெ.ரா., ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்., 5 மற்றும் 6ம் தேதிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியாக பேச்சு போட்டி நடைபெற உள்ளது.இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர் இருவருக்கு சிறப்பு பரிசாக, 2,000 ரூபாய் வழங்கப்படும்.திருவள்ளூர் மாவட்டத்தில் பயிலும் கல்லுாரி மாணவ - மாணவியர் தங்கள் கல்லுாரி முதல்வரிடமும், பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று, போட்டியில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!