Load Image
Advertisement

பருவநிலை மாற்றத்தின் தாக்கம்: வேளாண் பல்கலையில் பயிலரங்கு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய உரக்கழகம் இணைந்து, வேளாண் மீதான பருவநிலை மாற்றத்தின் தாக்கம் - உரக்கொள்கையின் பங்கு என்ற தலைப்பில் தேசிய பயிரலங்கம் பல்கலை அரங்கில் நடந்தது.இதில், இந்திய உரக்கழக மண்டல தலைவர் மூர்த்தி உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம், உர விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் குறித்தும் விளக்கமளித்ததுடன்; உரக்கொள்கையை நிலைநிறுத்தி பல்வேறு சீர்த்திருத்தங்களை கவனிக்கவேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வேளாண் துறையில் தன்னிறைவு அடைய காலநிலைக்கு ஏற்ற வேளாண் நடைமுறையின் அவசியம், தாவரங்களில் ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பில் காலநிலை மாற்றத்தின் பங்கு, கரிம கனிம மற்றும் உயிர் உரங்கள் வாயிலாக சமச்சீர் உரங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம், நானோ உரம் மற்றும் நீரில் கரையும் உரங்களின் முக்கியத்துவம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்தனரர்.நிகழ்ச்சியில், பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், பயிர் மேலாண்மை இயக்கக இயக்குனர் கலாராணி, இயற்கை வள மேலாண்மை இயக்கக இயக்குனர் பாலசுப்ரமணியம், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement