போலீஸ் அதிகாரிகளுக்கு மன மேலாண்மை பயிற்சி
சென்னை: சென்னை காவல் துறை ஆய்வாளர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களுக்கு, மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்து நேற்று, ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடத்த பயிற்சி வகுப்பை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் துவக்கி வைத்தார். இதில், 217 ஆய்வாளர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர்.காவலர்கள் பணிச்சமநிலை மற்றும் குடும்ப வாழ்வில் சிறந்து விளங்கவும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல் நலனை பேணவும் உளவியல் ஆலோசனைகளை முனைவர் சுபாஸ் சந்திரன் எடுத்து உரைத்தார். மேலும் பணிபுரியும் காவலர்கள் குறைகளை கேட்டறிந்து தீர்த்தல், சக பணியாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!