Load Image
Advertisement

பாதி விலை நூல் திட்டம் : தமிழறிஞர்கள் மகிழ்ச்சி

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் பதிப்பிக்கப்பட்டுள்ள அனைத்து நுால்களையும் பாதி விலையில் விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், தமிழறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், வரலாற்று ஆய்வாளர்களான ஐராவதம் மகாதேவன், பத்மாவதி, அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி, பா.ரா.சுப்பிரமணியன், ப.சண்முகம், குடவாயில் பாலசுப்பிரமணியன், பூங்குன்றன் உள்ளிட்டோரின் ஆய்வு நுால்களை பதிப்பித்துள்ளது. இலக்கிய, மொழி ஆய்வாளர்களான அடிகளாசிரியர், மருதநாயகம், சுயம்பு, ரா.சந்திரசேகரன், சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோரின் ஆய்வு நுால்களையும், எச்.பாலசசுப்பிரமணியன், வி.முருகன், டி.என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரின் மொழிபெயர்ப்புகளையும் பதிப்பித்துள்ளது.இதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள் எனும் நுாலும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் பண்டைய வரலாறு, இலக்கியம், நிலம், தாவரம், அளவை, வாழ்வியல் குறித்த அரிய ஆய்வு நுால்களை இந்நிறுவனமே அதிகம் பதிப்பித்துள்ளது. இதை ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் அதிகம் வாங்குகின்றனர்.இவற்றின் விலை 50 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை உள்ளதால், பலரால் இவற்றை வாங்க முடியவில்லை; மலிவு விலையில் நுால்களை விற்றால்தான் ஆய்வாளர்களால் பயன்பெற முடியம் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்ற இந்நிறுவனம், தற்போது, நிறுவனத்தின் அனைத்து நுால்களையும் பாதி விலைக்கு விற்பனை செய்கிறது. இதனால், ஆய்வாளர்களும், அறிஞர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:கடந்த 9ம் தேதி தான், இந்த திட்டம் தொடங்கப்பட்டது. என்றாலும், தற்போது தினமும், 50,000 ரூபாய்க்கு மேல் புத்தகங்களை வாங்குகின்றனர். நுால்களை நேரில் பெற இயலாதோர், 78458 74314 என்ற ஜி பே எண்ணிற்கோ அல்லது 2539 10102 1743 என்ற வங்கி கணக்கு எண்ணிற்கோ, உரிய தொகையை செலுத்தி, முகவரி உள்ளிட்ட விபரங்களை 78458 74314 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அல்லது, books@cict.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவித்தால், நுால்களை அனுப்புவோம். நுால்களின் பட்டியல், நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement