சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களுக்கு ஆலோசனை கூட்டம்
சென்னை: பள்ளிக்கல்வியின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான மாநில ஆலோசனை கூட்டம், திருச்சியில் வரும், 21ம் தேதி முதல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஒ.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளிக்கல்வியின் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்களான, டி.இ.ஓ.,க்களுக்கு, மாநில ஆலோசனை கூட்டம், திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 21ம் தேதி முதல் 23 வரை கூட்டம் நடக்கும் இந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வியின் நலத்திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் மடிக் கணினிகளுடன், அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!