காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி கட்டும் பணி எப்போது?
காரைக்குடி: காரைக்குடியில் வேளாண் கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், சட்டக் கல்லுாரிக்கான கட்டட பணி எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் அதிகரித்துள்ளது.செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையம் திறக்கப்பட்டது. இக்கல்லுாரி கட்டடத்திற்கான இடம் தேர்வு செய்யப்படுவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் 2 ஆண்டுகளாக கட்ட டம் கட்டும் பணி தொடங்கவில்லை. தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.58 கோடியில் வகுப்பறை, பேராசிரியர் அறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளனர்.அதே போல், கடந்த 2022 இல் தமிழகத்தின் 15வது அரசு சட்டக் கல்லூரி காரைக்குடியில் தொடங்கப்பட்டது. அழகப்பாசெட்டியார் அரசு இன்ஜி., கல்லூரியில் தற்காலிக சட்டக் கல்லூரி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மாணவிகள் 92, மாணவர்கள் 62 என 154 பேர் படிக்கின்றனர். தற்போது 5 ஆண்டு படிப்பில் 72 பேர் சேர்ந்துள்ளனர். புதிய சட்ட கல்லூரிக்காக திருச்சி - - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இடம் தேர்வு செய்யும் பணி பல மாதங்களாக இழுபறி நிலையில் நடந்த நிலையில், ஒரு வழியாக சூரக்குடி அருகே 19.16 ஏக்கர் இடம் கல்லூரி கட்டடத்திற்கும், 2 ஏக்கர் மாணவர் விடுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தை தேர்வு செய்து பல மாதங்களான நிலையில் கட்டுமான பணி இன்னும் துவங்கவில்லை என மாணவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!