பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை கண்டறியும் பணி தீவிரம்
கம்பம்: பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை கண்டறியும் பணிகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. ரத்த மாதிரிகளை சி.பி.சி., மிஷினில் வைத்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன.மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு பரிசோதிக்கும் பணிகள் பணி சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சி.பி.சி., மிஷினில் பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன் சாதாரண காய்ச்சல் என்றாலும் அனைத்து வகையான ஆய்வுகளும் சி.பி.சி., மிஷின் மூலம் பார்க்கப்படுகிறது.இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், நாள் ஒன்றுக்கு கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் என 200 பேர்களுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்யப்படுகின்றன. சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் சி.பி.சி., மிஷின்களில் கொடுத்து உடனுக்குடன் முடிவுகள் தெரிந்து கொள்ளப்படுகின்றன. செல் கவுண்டர் என்ற மருத்துவ கருவி மூலம் வெள்ளை அணுக்கள், தட்டணுக்களின் எண்ணிக்கை பார்க்கப்படுகின்றன. சி.பி.சி., மிஷின் டெங்கு காய்ச்சலுக்கு மட்டும் இன்றி, அனைத்து வகையான ஆய்வுகளுக்கும் பயன்பட்டு வருகிறது என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!