Load Image
Advertisement

கோடை விடுமுறை நீட்டிப்பு; ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்தாண்டு மார்ச் துவக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மார்ச் மாத 2வது வாரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்தது.

கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திர காலம் முடிந்ததும் வழக்கமாக வெப்பம் குறையும். ஆனால், கடந்த 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது.
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். அதன்படி தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையில் ஜூன் 5ம் தேதியும், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், ஜூன் 1ம் தேதியும் திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பை 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement