காலிஸ்தான் பற்றிய குறிப்புகள் பிளஸ் 2 பாட புத்தகத்தில் நீக்கம்
புதுடில்லி: பிளஸ் 2 வகுப்பின் அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில், தனி சீக்கிய நாடான காலிஸ்தான் கோரிக்கை குறித்த குறிப்புகளை, என்.சி.இ.ஆர்.டி., நீக்கி உள்ளது.
பிளஸ் 2 வகுப்பின் அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில், சுதந்திர இந்தியாவின் அரசியல் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பாடத்தில், அனந்த்புர் சாஹிப் தீர்மானம் குறித்த சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனி சீக்கிய நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து சில வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கு, சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த வரிகளை நீக்க என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விட்டதால் அதன், டிஜிட்டல் வடிவத்தில் இந்த வரிகள் நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனந்த்புர் சாஹிப் தீர்மானம் சிரோமணி அகாலி தளத்தால் 1973ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம்.
இந்த தீர்மானம் பஞ்சாபிற்கு சுயாட்சியைக் கோரியது. மேலும் சண்டிகர் நகரை பஞ்சாபிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அண்டை மாநிலங்களில் பஞ்சாபிக்கு இரண்டாம் மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!