Load Image
Advertisement

எடின்பர்க் பல்கலையில் ஹிந்தியில் பாடம்

லண்டன், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலையில், காலநிலை மாற்றம் குறித்த பாடத்தை ஹிந்தி வழியில் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள பிரிட்டனின் ஸ்காட்லாந்தில், பிரசித்தி பெற்ற எடின்பர்க் பல்கலை உள்ளது. இங்கு காலநிலை மாற்றம் குறித்த பாடம் கற்றுத் தரப்படுகிறது.

இந்த பல்கலை சார்பில் ஏற்கனவே ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், அரபி, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடத்தை கற்றுத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிந்தி வழியில் பாடம் நடத்துவது தொடர்பாக, எடின்பர்க் பல்கலை நிர்வாகத்துக்கும், இங்குள்ள இந்திய துாதரகத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இது குறித்து, பல்கலையின் பேராசிரியர் டேவ் ரியா கூறியதாவது:
இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹிந்தி பேசும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த அறிவியல், அதன் தாக்கங்களை அறிந்து கொள்வதற்கு இது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இவ்வாறு அவர் கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement