Load Image
Advertisement

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தில்லுமுல்லு ப்ளூ டூத் பயன்படுத்தியவர் சிக்கினார்

இன்ஜினியர் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஒருவர் ப்ளூ டூத் இயர்பட் பயன்படுத்தி தேர்வு எழுதி பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு துறைகளில் இன்ஜினியரிங் பணிகளில் 1083 காலியிடங்களை நிரப்ப மே 27ம் தேதி போட்டி தேர்வு நடந்தது.

வேலுார் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய ஒருவர் காதில் மருத்துவ சிகிச்சை செய்துள்ளதற்கான துணிக் கட்டுடன் தேர்வு எழுத வந்துள்ளார். தேர்வு எழுதும்போது முணுமுணுத்தவாறு இருந்துள்ளார். இதை கண்காணிப்பாளர் கவனித்து அவரை விசாரித்தார்.
காதில் சிறிய அறுவை சிகிச்சை செய்துள்ளதால் கட்டு போட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனாலும் சந்தேகத்தில் அவரது காது கட்டை அகற்றி பார்த்ததில் ப்ளூ டூத்தில் இயங்கும் நவீன இயர்பட் மாட்டி இருப்பது தெரியவந்தது. அதை மறைக்க கட்டு போட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை உடனடியாக காட்பாடி போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவரது பெயர் அப்துல் பயஸ் என்றும் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் தேர்வுக்கான விடைகளை எழுத ப்ளூ டூத் இயர் பட் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேர்வு அறைக்கு வெளியே இருப்பவருக்கு ப்ளூ டூத் வாயிலாக மொபைல் போனில் அழைப்பு விடுத்து அதன் வழியாக விடைகளை கேட்டு எழுத முயற்சித்துள்ளார்.
மொபைல் போன் இணைப்பில் இருந்த நபர் தேர்வு மையத்துக்கு வந்தவரா அவரிடம் வினாத்தாள் இருந்ததா என போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த சம்பவம் அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு போன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளிலும் வரும் காலத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தேர்வாணைய அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement